Sunday 5th of May 2024 08:23:33 PM GMT

LANGUAGE - TAMIL
.
இடைநிறுத்தப்பட்ட ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்ட ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பம்!


பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரிட்டனின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பிறகு பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது.

எனினும் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE